ஒரு சமயம் ரேவா நதிக்கரையில் வாழ்ந்து வந்த 'வேதவித்' எனும் அந்தணன் இந்த க்ஷேத்ரத்திற்கு வந்து 'ஆசணதை' என்னும் மந்திரம் ஜெபித்து திருமாலை நோக்கித் தவம் செய்தான். பகவான் ப்ரத்யக்ஷமாகி அவனுக்கு பரமபதம் அளித்தார். அந்தணர் பிரார்த்தித்தபடி 'விஜயாஸனர்' என்னும் திருநாமம் பெற்றார்.
மூலவர் விஜயாஸனப் பெருமாள் என்ற திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஆதிசேஷன் குடைபிடிக்க வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். 'எம்மிடர் களைவான்' என்றும் அழைக்கப்படுகிறார். தாயார் வரகுணவல்லி, வரகுணமங்கை ஆகிய திருநாமங்களால் வணங்கப்படுகின்றார். அக்னி, உரோமச முனிவர், சத்தியவான் ஆகியோருக்கு பகவான் ப்ரத்யக்ஷம்.
மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்த ஸ்தலம். ஆழ்வார் நவதிருப்பதிகளில் ஒன்று.
நம்மாழ்வார் 1 பாசுரம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|